Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

மதுரையில் ஆயுஷ் மருத்துவ கண்காட்சி

மதுரையில் ஆயுஷ் மருத்துவ கண்காட்சி
மதுரை மடீட்சியா அரங்கில் `ஆயுஷ் - 2026’ பாரம்பரிய மருத்துவ கண்காட்சியை எம்எல்ஏ கோபிசன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். அருகில் மடீட்சியா தலைவர் வி.செந்தில்குமார் மற்றும் பலர்.

மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் அன்னகாமு கண்காட்சி வழிகாட்டி மலரை வெளியிட்டார்.

பகிரவும் WhatsApp Facebook

ஆயுஷ்-2026 பாரம்பரிய மருத்துவ கண்காட்சி மதுரை மாவட்ட சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கம் (மடீட்சியா) சார்பில் நேற்று துவங்கியது.

எம்எல்ஏ கோபிசன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். கண்காட்சி தலைவர் ராஜமுருகன், துணைத் தலைவர் வெங்கடேஷ் ஆகியோர் வரவேற்றனர். 

தன்வந்திரி நிலைய ஆயுர்வேத வைத்தியசாலை தலைவர் தன்வந்திரி பிரேம்வேல், தேசிய சித்த மருத்துவ நிறுவன இயக்குனர் செந்தில்வேல் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

 ஐஎம்பிசிஓபிஎஸ் தலைவர் கண்ணன் வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் அன்னகாமு கண்காட்சி வழிகாட்டி மலரை வெளியிட்டார். 

மடீட்சியா தலைவர் செந்தில்குமார் பேசுகையில், "சித்தா, ஆயுர்வேதா குறித்து மதுரை மக்கள் அறிந்துகொள்ளும் வகையில், கண்காட்சியை நடத்துகிறோம். இதில் 100 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சி வரும் 18ம் தேதி வரை 3 நாள் நடைபெறுகிறது. 

இதில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, இயற்கை மருத்துவம், ஹோமியோபதி, யோகா மற்றும் நேச்சுரோபதி பற்றிய பல்வேறு கருத்தரங்குகளும் நடக்கிறது" என்றார்.





முந்தைய செய்தி
Bengaluru airports, Canada's Vancouver sign agreement
அடுத்த செய்தி
தேனியில் தொடர் மழை: வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை

தொடர்புடைய செய்திகள்